Thirumathi Hitler Serial Love Song Lyrics
தேன் துளியின் விழியா
தீ தீண்டும் மொழியா
இவள் முழுமதி நிலவா
இல்லை திருமதி மகளா
நான் சூரிய கதிராய்
உன் பார்வையும் புதிராய்
நிழல் மோதுதே நிகராய்
நிஜம் சொல்லடி திமிராய்
குழல் ஊதும் போது விரல்கள் மறுக்குது இதுவா சொந்தம்
நிழல் தேடும் போது வந்தாய் அதுதானே நம் பந்தம்
நான் தூரத்தில் கானல்
நீ ஓரத்தில் நானல்
நம் இருவரின் தேடல்
அது இருவிரல் ஊடல்
உயிர் போகுதே தூரம்
உடல் வேகுதே ஓரம்
மனம் ஏங்குது ஏனோ
நாம் சேர்ந்திட தானோ
நான் இங்கு காகிதமாய் கசங்கிய கவிதையே
நீ அங்கு ஓவியமாய் ஒளிர்ந்திடும் வர்ணமே
நான் நடக்கும் பாதையெல்லாம் முட்புதர் கள்ளியே
நீ நடக்கும் பாதை எல்லாம் பூக்களின் பள்ளியே
கனவோடு வாழ மறுத்தேன்
மனதோடு பேசி சலித்தேன்
இரவோடு உறக்கம் தொலைத்தேன்
உறவெங்கே தேடினேன்
நீ கோபத்தின் உச்சம்
நான் சாபத்தின் எச்சம்
நாம் சேர்ந்தாலே அச்சம்
விதி சேர்க்காதோ மிச்சம்
நான் அடங்காத மானாய்
அட அழைக்கின்றேன் தானாய்
நீ அருந்திடும் தேனாய்
உன் உயிர் தொடுவேனா
குழல் ஊதும் போது விரல்கள் மறுக்குது இதுவா சொந்தம்
நிழல் தேடும் போது வந்தாய் அது தானே நம் பந்தம்
கரை சேர்ந்திடும் புயலாய்
பிறை தீண்டிடும் இரவாய்
நான் முட்களின் தளிரில்
வந்த முழுமதி நிலவா
குடை மோதிடும் மழையாய்
விடை தேடிடும் பிழையாய்
நான் ஆறடி திமிரில்
வந்த திருமதி மகளாய்
குழல் ஊதும் போது விரல்கள் மறுக்குது இதுவா சொந்தம்
நிழல் தேடும் போது வந்தாய் அதுதானே நம் பந்தம்
நான் தூரத்தில் கானல்
நீ ஓரத்தில் நானல்
நம் இருவரின் தேடல்
அது இருவிரல் ஊடல்
உயிர் போகுதே தூரம்
உடல் வேகுதே ஓரம்
மனம் ஏங்குது ஏனோ
நாம் சேர்ந்திட தானோ
No comments:
Post a Comment